சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகள்

கடந்த 2 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம், வன்முறைகள் தொடர்பில் 1000-இற்கும் அதிக முறைப்பாடுகள்

by Staff Writer 16-08-2026 | 8:35 AM

Colombo (News 1st)  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2 மாதங்களில் கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறார்களை குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பெற்றோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனீ அபேகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் சிறுவர் துஷ்பிரயோகம், வன்முறைகள் தொடர்பில் பதிவாகியுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


சிறார்களை கைவிடுதல், உரிய முறையில் கவனிக்க தவறுதல் போன்ற முறைப்பாடுகளே அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.