.webp)
-558902.jpg)
Colombo (News 1st) அடுத்த வருடத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள், விநியோகத்தர்கள் ஊடாக பெறப்பட்டமைதால் நிலக்கரியின் தரம் தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது.
புதிய முறைமையின் கீழ் குறித்த பரிசோதனை அறிக்கைகளை நேரடியாக இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இடைத்தரகர்கள் மூலம் இடம்பெறும் நிதி மற்றும் தர மோசடிகளை முழுமையாக தடுத்து நிறுத்த முடியும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
