.webp)
-558881.jpg)
Colombo (News 1st) கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சேதமடைந்த நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டடங்களை புனரமைக்கும் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
விமானப்படையினரின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வர்த்தமானி ஊடாக மீண்டும் ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்ட பழைய போகம்பரை சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
அடுத்த வாரமளவில் கைதிகளை அங்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
