.webp)
-558781.jpg)
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவராக செயற்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என கூறப்படும் இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி சுமார் 10 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்போது, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவந்தவர் இஷாரா செவ்வந்தி என்பது விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டது.
கொலைக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை நினைவுகூரத்தக்கது.
