மகசின் சிறைச்சாலையிலபதற்றம் : 9 கைதிகள் மாற்றம்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம் : 09 கைதிகள் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றம்

by Staff Writer 07-08-2026 | 11:32 AM

Colombo (News 1st) கொழும்பு மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் பின்னர் 09 கைதிகள் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். 

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

சிறைச்சாலையிலுள்ள 2 விடுதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே நேற்றிரவு (06) தகராறு ஏற்பட்டது. 

இதன்போது, அங்கிருந்த சுமார் 50 பேர் சிறைச்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வன்முறை ஏற்படும் வகையில் செயற்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப்பொருள் பொதியொன்றை எடுப்பதற்காக கைதிகள் சிலர் முயற்சித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்போது, காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலைகள் அதிகாரிகளின் தலையீட்டுடன் பதற்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.