.webp)

Colombo (News 1st) ஆடவருக்கான சர்வதேச ஈட்டி எறிதல் தரப்படுத்தலில் இலங்கையின் ருமேஷ் தரங்க முன்னிலை பெற்றுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் 89.75 மீட்டர் தூரத்திற்கு திறமையை வௌிப்படுத்தி அவர் தங்கப்பதக்கம் வென்றார்.
தரப்படுத்தலில் ருமேஷ் தரங்க 1,354 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இலங்கை வீரரொருவர் சர்வதேச ஈட்டி எறிதல் தரப்படுத்தலில் முன்னிலை பெற்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் ஜெர்மனின் ஜூலியன் வெபர்ட் முன்னிலை பெற்றிருந்தார்.
