.webp)
-558498.jpg)
Colombo (News 1st) நாட்டில் 30 வீதமான தொழிற்சாலைகளுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இல்லை என வெளிக்கொணரப்பட்டுள்ளது.
அத்தகைய நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ஸ தெரிவித்தார்.
சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை பெறாமை மற்றும் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக 200-இற்கும் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளாத உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
