.webp)
-558240.jpg)
Colombo (News 1st) முழு நாடும் ஒன்றாக செயற்றிட்டம் மூலம் 9 மாதங்களுக்குள் 2,253 கிலோ 834 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி 49,584 மில்லியன் ரூபாவென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள் 2,640 கிலோ 695 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 42,251 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தினூடாக 293 கிலோ 732 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 10 ஆயிரத்து 221 மில்லியன் ரூபாவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 9 மாதங்களுக்குள் போதை வில்லைகளுடன் 743 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதை வில்லைகளுடன் 7,866 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முழு நாடும் ஒன்றாக செயற்றிட்டத்தின் மூலம் 9 மாதங்களில் 36 இலட்சம் போதை வில்லைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்தார்.
