பஸ்களை கண்காணிக்க புதிய டிஜிட்டல் முறைமை

பயணிகள் போக்குவரத்து பஸ்களை கண்காணிக்க புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகம் : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

by Staff Writer 01-08-2026 | 8:14 AM

Colombo (News 1st) பயணிகள் போக்குவரத்து பஸ்களை கண்காணிப்பதற்கு புதிய டிஜிட்டல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து அதனை நிறைவு செய்யும் வரை பஸ்களை முழுமையாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  குறிப்பிட்டுள்ளது. 

இந்த வருடத்திற்குள் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் இந்த புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

பஸ்களின் திறன், பயணிகளின் பாதுகாப்பு நிலைமை, சாரதி மற்றும் நடத்துனரின் செயற்பாடுகள், பஸ் பயணிக்கும் வேகம், நிறுத்தப்படும் இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் புதிய டிஜிட்டல் முறைமையின் ஊடாக கண்காணிப்படவுள்ளன. 

இதன்போது, சட்டத்திற்கு முரணான விடயங்கள் அவதானிக்கப்பட்டால் உரிய பஸ்களுக்கு தண்டனை புள்ளிகளை வழங்குதல் அனுமதி பத்திரங்களை இரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.