.webp)
-558247.jpg)
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கு திசையில் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வணிக கப்பலொன்றிலிருந்த 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன.
இந்த வெற்றுக் கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலில் கரை பகுதியை நோக்கி அடித்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடலில் பயணிக்கும் கடற்றொழிலாளர்களையும் சிறிய மீன்பிடி படகுகளை பயன்படுத்துவோரையும் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கடலில் கொள்கலன்கள் மிதப்பதை அவதானித்தால் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
