.webp)
-558171.jpg)
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தற்காரருமான கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர்கள் என கூறப்படும் மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இம்ரானின் பிரதான உதவியாளரான இரத்மலானையைச் சேர்ந்த 'சைமா' என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் நிதி ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடுத்த வாரத்தில் மூவரும் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
