அஸ்வெசும மீளாய்வு 73% நிறைவு

அஸ்வெசும புதிய பயனாளர் பெயர்ப்பட்டியல் : ஒக்டோபர் முதல் கொடுப்பனவுகள் வழங்கல்

by Staff Writer 31-07-2026 | 10:30 AM

Colombo (News 1st) அஸ்வெசும பயனாளர்களின் பெயர் பட்டியலை புதுப்பிப்பதற்கான மீளாய்வு நடவடிக்கைகள் 73 வீதம் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

மீளாய்வின் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஒக்டோபர் முதல் முன்னெடுக்கப்படுமென சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்தார். 

தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களின் இறுதிப் பெயர் பட்டியலை செப்டெம்பர் மாத இறுதியில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

சில பிரதேச செயலகப் பிரிவுகள் 100 வீதமான மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் மீளாய்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்தார். 

பெரும்பாலான பிரதேச செயலகப் பிரிவுகளில் 90 வீதமான மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் கொடுப்பனவுகளை செலுத்த ஆரம்பிக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.