வத்தளை துப்பாக்கிச்சூடு : மேலும் ஒருவர் கைது!

வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : காரை வாடகைக்கு எடுக்க பணம் கொடுத்த இளைஞர் கைது!

by Staff Writer 30-07-2026 | 11:59 AM

Colombo (News 1st) வத்தளை - பள்ளியாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் பயணித்த காரை வாடகைக்கு பெறுவதற்காக வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து சந்தேநபர்களுக்கு கொடுத்ததன் காரணமாக குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சீதுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வத்தளை பள்ளியாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். 

கடந்த 23 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 39 வயதான ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.