.webp)
-558022.jpg)
Colombo (News 1st) அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை இன்று(27) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த முன்மொழிவிற்கு அமைய, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்காக அரசியலமைப்பு திருத்தப் பிரேரணை தயாரிக்கப்படவுள்ளது.
ஏனைய நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக நீதிமன்றங்கள் கட்டமைப்பு சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அதற்குரிய வரைபுகளை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு அனுப்புவதற்கும் அதனை தொடர்ந்து சட்ட மாஅதிபரின் அனுமதிக்காக அனுப்புவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
