இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

by Staff Writer 13-07-2026 | 5:16 PM

Colombo (News 1st) நெல் கொள்வனவு இன்று(13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. 

நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. 

இதற்காக அரசாங்கம் இம்முறை 6000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெற்கொள்வனவு செய்வதை இலகுபடுத்தும் நோக்கில் அடகுச்சான்று கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான 143 நெல் களஞ்சியசாலைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.