நீதியமைச்சரால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

பழைய போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையைாக பெயரிட்டு வர்த்தமானி

by Staff Writer 09-07-2026 | 3:17 PM

Colombo (News 1st) பழைய போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையைாகப் பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ.கஜநாயக்கவிடம் இது தொடர்பில் வினவிய போது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய பின்னர் கைதிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, காலி மஹமோதர பழைய வைத்தியசாலை வளாகத்தை சிறைச்சாலையாக பெயரிட்டு நேற்று முன்தினம்(07) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டது.