.webp)

Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை முன்னெடுத்துச்சென்ற 25 நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியால் பெயரிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்துதல், பேணுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்களின் விழிப்புணர்விற்காக இலங்கை மத்திய வங்கி குறித்த 25 நிறுவனங்களின் பட்டியலை தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

