புதிய கடற்படை தளபதி நியமனம்

27ஆவது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

by Staff Writer 30-06-2026 | 5:31 PM

Colombo (News 1st) இலங்கை கடற்படையின் 27ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் தலைமை அதிகாரியாக இருந்த வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, வைஸ் அட்மிரலாக பதவி உயா்த்தப்பட்டதை அடுத்து, கடற்படைத் தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று(30) கையளிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் பழைய மாணவரான டேமியன் பெர்னாண்டோ, 1991ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் 21ஆவது ஆட்சேர்ப்பின் கீழ் நிறைவேற்று பிரிவில் அதிகாரியாக (Cadet Officer) கடற்படையில் இணைந்தார்.