.webp)

Colombo (News 1st) வெனிசுவேலாவின் வடமத்திய பகுதியில் 7.1 மற்றும் 7.5 மெக்னிடியூட் அளவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.
நாட்டின் தலைநகரான கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இதனையடுத்து அந்நாட்டு ஜனாதிபதியினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்குண்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, வெனிசுவேலாவியின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
