.webp)

Colombo (News 1st) வவுனியா மாநகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆகியோர் அந்த பதவிகளில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்து வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிவிசேட வர்த்தமானிகளை வௌியிட்டுள்ளார்.
1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் 1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க நகர சபைகள் கட்டளை சட்டம் ஆகியவற்றின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வட மாகாண ஆளுநர் இந்த அதிவிசேட வர்த்தமானிகளை வௌியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று(24) முதல் குறித்த இருவரும் பதவிகளில் இருந்தும் உறுப்புரிமைகளில் இருந்தும் நீக்கப்படுவதாக வர்த்தமானிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
