.webp)

Colombo (News 1st) அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டிகள் அணியாமல் பயணித்த 332 வாகனச் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக வீதிகளில் நேற்று 1800 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உற்பத்தியின்
போது ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்கள், அதிவேக வீதிகளில் பயணிக்க மேலும் 03 மாத சலுகைக் காலம் நேற்று(20) முதல் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய வாகனங்களின் சாரதிகள், அதிவேக வீதிகளில் பயணிப்பதற்கு ஆசனப்பட்டிகள் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறி செயற்படும் வாகன சாரதிகள், அதிவேக வீதிகள் ஊடாக பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்களெனவும் அவர் கூறியுள்ளார்.
