.webp)

Colombo (News 1st) கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக புதிதாக 07 அலகுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
கொள்முதல், விசேட விசாரணை அறிக்கை, சுற்றாடல் கணக்காய்வு மற்றும் செயற்றிறன் கணக்காய்வு நடைமுறை உள்ளிட்ட அலகுகள் அவற்றுள் அடங்குகின்றன.
குறித்த பிரிவுகளை நிறுவுவதன் ஊடாக, தற்போது பொதுவான முறையில் மேற்கொள்ளப்படும் கணக்காய்வு செயன்முறையை உரிய பிரிவுகளுக்கு அனுப்பி திறம்பட முன்னெடுக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் 250 வெற்றிடங்களுக்காக புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவிடமிருந்து கிடைத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
