.webp)
Colombo (News 1st) பொலன்னறுவை, மெதிரிகிரிய, திக்கல்புர ஆரம்பப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று(10) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV பிரதம நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி, திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய மந்திரீ அமரசிங்க, மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பாதிய விஜயந்த, பாடசாலை அதிபர் நிமாலி டி சில்வா, நியூஸ் ஃபெஸ்ட் அலைவரிசை பிரதானி சுரங்க சேனாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அந்த பிள்ளைகளின் கண்களில் மின்னிய ஆனந்தக் கண்ணீரும் முகத்தில் தோன்றிய புன்னகையும் இந்த நற்பணியின் மதிப்பை முழு சமூகத்திற்கும் உணர்த்தியது..
சிரச தனது 28ஆவது ஆண்டு பூர்த்தியை மக்களுடன் இணைந்து இன்று கொண்டாடியது.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன், மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு தொகுதியிலிருந்து பெறப்பட்ட நீர் 28 புதிய கலசங்களில் முதலில் புத்த பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நீர் ஏந்திய கலசங்கள் திக்கல்புர ஸ்ரீ சுதர்வாராம விகாரை வரை அழகிய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அதனையடுத்து, சிரச TV-யின் 28ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புத்த பெருமானுக்கு சிரச டிவி ஊழியர்களால் அஷ்டாபான பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு, மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமும் பெறப்பட்டது.
