.webp)

Colombo (News 1st) கடும் மழையினால் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
