எபோலா வைரஸ் தொடர்பில் வழிகாட்டல் கோவை

எபோலா வைரஸ் தொடர்பில் வழிகாட்டல் கோவை

by Staff Writer 21-05-2026 | 8:36 AM

Colombo (News 1st) எபோலா வைரஸ் தொடர்பில் 5 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் கோவையை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் அறிக்கை வெளியிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, நாட்டில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான நிலையங்கள் சார்ந்த கண்காணிப்பைப் பலப்படுத்தல்

சந்தேகத்திற்கிடமான நோயாளியொருவர் இனங்காணப்பட்டால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக தேசிய தொற்றுநோய் நிறுவகத்தை முன்னதாகவே தயார் நிலையில் வைத்திருத்தல்ே

தேவையான நோய்களை இனங்காண்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தைத் தயார்படுத்த​ே

நாட்டின் கண்காணிப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தல் மற்றும் உலகளாவிய நிலைமையை தொடர்ச்சியாக ஆராய்த

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தேவையான நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் சிறந்த ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமங்களுக்கு அமைய, எபோலா குறைந்த அபாயமுள்ள நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த எபோலா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற வகையில் அச்சமடையத் தேவையில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.