இந்திய விமானப்படை தளபதி நாட்டிற்கு வருகை

இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நாட்டிற்கு வருகை

by Staff Writer 19-05-2026 | 5:36 PM

Colombo (News 1st) இந்திய விமானப்படை தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் 03 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(18) நாட்டை வந்தடைந்தார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள அவர் பத்தரமுல்லவிலுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

இலங்கை - இந்திய விமானப்படை தளபதிகள் இடையே உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுடன் பாதுகாப்பு பிரதியமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.