.webp)

Colombo (News 1st) எதிர்வரும் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதித்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
