பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து நோக்கி பயணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து நோக்கி பயணம்

by Staff Writer 18-05-2026 | 6:42 PM

Colombo (News 1st) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான UL-403 விமானத்தில் பிரதமர் இங்கிலாந்து நோக்கி பயணமானார்.

லண்டன் நகரில் நடைபெறவுள்ள 22ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பங்களிப்புகள் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் பிரித்தானியா இடையிலான இருதரப்பு நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் செயலாளரை பிரதமர் சந்திக்கவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பவுள்ளார்.