.webp)
 (2)-556137.jpg)
Colombo (News 1st) தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 717 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி வழிபாட்டு தலங்களுக்கு அண்மையிலுள்ள 276 மதுபான விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அண்மையிலுள்ள 186 விற்பனை நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு அருகிலுள்ள 255 விற்பனை நிலையங்கள் உட்பட மொத்தமாக 717 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை 02 வாரங்களில் மூடுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
