தெனியாயவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீள திறப்பு

தெனியாயவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீள திறப்பு

by Chandrasekaram Chandravadani 12-05-2026 | 4:14 PM

Colombo (News 1st) வைரஸ் தொற்று காரணமாக தெனியாயவில் மூடப்பட்டிருந்த 04 பாடசாலைகளையும் நாளை(13) மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தெனியாய மத்திய கல்லூரி, பல்லேகம சித்தார்த்த ஆரம்ப பாடசாலை, ராஜபக்ஸ வித்தியாலயம், புனித மத்தேயூ வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகளும் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டிருந்தன.

வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தென் மாகாண ஆளுநர் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தெனியாய பகுதியில் இதுவரை 50 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.