காலியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு

காலியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 12-05-2026 | 3:32 PM

Colombo (News 1st) காலி - டிக்சன் சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹங்கம பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காலி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த குறித்த நபர், வீட்டிலிருந்து வௌியே சென்ற போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 05 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணத்தை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.