.webp)

Colombo (News 1st) இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
