.webp)

Colombo (News 1st) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாமை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
வியட்நாம் மற்றும் இலங்கைக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸ் குதிரைப்படைப் பிரிவினரின் மரியாதையுடன் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாமுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதேவேளை,
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன வரவேற்றார்.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆழமான, நடைமுறைக்குரிய மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளை புதிய அத்தியாயத்திற்குக் கொண்டு செல்ல விரும்புவதாக இதன்போது வியட்நாம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வியட்நாம் வளர்ச்சிப் பாதையில் பயணித்த விதத்தை வியட்நாம் ஜனாதிபதி இங்கு தௌிவுப்படுத்தினார்.
அதற்காக வியட்நாம் மக்களும் அரசாங்கமும் ஆற்றிய அர்ப்பணிப்பை விளக்கிய ஜனாதிபதி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
