.webp)
Colombo (News 1st) கம்மெத்த Rebuild வேலைத்திட்டம் நுவரெலியாவில் இன்று(07) ஆரம்பமானது.
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், அவர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
டித்வா சூறாவளியினால் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்காக கம்மெத்த செயற்படுத்தும் மூன்றாவது நடவடிக்கையே கம்மெத்த Rebuild வேலைத்திட்டமாகும்.
ஆரம்ப நிகழ்வு நுவரெலியா தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் விற்பனை உதவி பணிப்பாளர் பிரியந்த பெர்னாண்டோ, நுவரெலியா தொழிநுட்ப கல்லூரியின் அதிபர் சுஜீவ மெதகெதர, கம்மெத்த உதவி முகாமையாளர் கிஹான் உத்யோக உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
கட்டுமானத் தொழில், தச்சுத் தொழில், மின்சாரம், உலோக வேலைகள், குழாய் பொருத்துதல் மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் தொழிலில் ஈடுபட்ட மக்களுக்காக இன்று முழுவதும் விசேட பயிற்சி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை, தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம் ஆகியன கம்மெத்தவுடன் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்த பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தொழில்சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை(08) நடைபெறவுள்ளது.
