புதிய சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அங்கீகாரம்

விமல் எஸ்.கே.லியனகமவை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 05-05-2026 | 5:10 PM

Colombo (News 1st) விமல் எஸ்.கே.லியனகமவை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொடவின் பதவிக்காலம் இன்றுடன்(05) நிறைவடைகின்றது.

விமல் எஸ்.கே.லியனகம இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாவார்.

நாளை(06) முதல் அமுலுக்கு வரும் வகையில் விமல் எஸ்.கே.லியனகமவை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.