.webp)
Colombo (News 1st) மாலைதீவு ஜனாதிபதி, கலாநிதி Mohamed Muizzu உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
மாலைதீவின் மாலேவிலிருந்து ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் UL 116 விமானத்தினூடாக இன்று மாலை 05.33-க்கு மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூது குழுவினரை பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றனர்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் Sajidha Mohamed, வெளிவிவகார அமைச்சர், பல சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் மாலைதீவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
மாலைதீவு ஜனாதிபதி 2023ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவை அண்மித்த பகுதிகளில் இன்று(03) பிற்பகல் முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மாலைதீவு ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளில் போக்குவரத்து தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்படவுள்ளது.
மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
