14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

Sea of Sri Lanka கடற்பரப்பில் கைதான 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

by Staff Writer 22-04-2026 | 7:26 PM

Colombo (News 1st) Sea of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று(22)  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரணைதீவு பகுதியில் கடந்த ஏப்ரல் 08 மற்றும் 14ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

14 இந்திய மீனவர்களின் வழக்கு கிளிநொச்சி நீதவான் பொன்னுதுரை கிருஷாந்தன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஏப்ரல் 08ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கும் 03 குற்றச்சாட்டுகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 04 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களுக்கும் 03 குற்றங்களுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 04 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படகோட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், வழக்கின் அடுத்த விசாரணையின் போது படகின் உரிமையாளர்களை ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.