.webp)

Colombo (News 1st) நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திருவுருவச்சிலை இன்று(22) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
நல்லை ஆதீன குரு முதல்வராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நல்லை ஆதீன அறக்கட்டளையின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருவுருவ சிலை, கம்பவாருதி ஜெயராஜினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
