பலநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் கைது

பலநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் கைது

by Staff Writer 18-04-2026 | 8:05 PM

Colombo (News 1st) 161 கிலோகிராம் ஹெரோயினுடன் தெற்கு கடலில் கடற்படையிரால் முற்றுகையிடப்பட்ட பலநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளினால் தெய்வேந்திரமுனையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பலநாள் மீன்பிடி படகில், 06 பைகளுக்குள் 150 பொதிகளில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 400 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும்.

இந்த பலநாள் மீன்பிடி படகு கடந்த 30 ஆம் திகதி நில்வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்றுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு கைப்பற்றப்பட்ட படகு, நேற்று(17) திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.