இலங்கை நிறுவன நிலக்கரி அலுவலகத்துக்கு சீல்

இலங்கை நிறுவன நிலக்கரி அலுவலகத்துக்கு சீல்

by Staff Writer 11-04-2026 | 11:10 PM

Colombo (News1st) இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சி.ஐ.டியினால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, ஜனாதிபதியில் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதியின் போது பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற தெரிவுக் குழுக்களிலும் இந்த விடயம் தொடர்பான பல தகவல்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளமையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயலாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சி.ஐ.டியினால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.