.webp)

Colombo (News 1st) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(09) காலை 08 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்களின் ஊடாக சுகாதார அமைச்சினால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதனிடையே, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 436 வைத்திய அதிகாரிகளுக்கான சேவை நிலையங்கள் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
