வருமான ஆதாரங்களை வழங்குமாறு மஹிந்தவிற்கு அறிவிப்பு

சொத்து, செலவு, வருமான ஆதாரங்கள் தொடர்பான சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு அறிவிப்பு

by Staff Writer 07-04-2026 | 2:38 PM

Colombo (News 1st) சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு அவரது சொத்துக்கள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக, இதுவரை சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படாமை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதம் அனுப்பியுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த சத்தியக்கடதாசியை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.