.webp)
-613460-555042.jpg)
Colombo (News 1st) எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக புதிய வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், அனைத்து செயலாளர்கள் மற்றும் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் பிரதானிகளுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியினால் புதிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களில் உள்ள அனைத்து வளி சீராக்கிகளும்(AC) பிற்பகல் 03 மணிக்கு செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக விளம்பரங்களுக்கான மின் அலங்காரப் பலகைகள் மற்றும் திரைகள் இரவு 08 மணிக்கு பின்னர் அணைக்கப்பட வேண்டும் என வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதி விளக்குகளை பிற்பகல் 06 முதல் இரவு 10 மணி வரை அணைத்து வைக்க வேண்டும் எனவும் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்குபற்றும் விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்காக தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாதிருக்க வேண்டும் எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
