ஆரம்பமாகிறது கிரிக்கெட் திருவிழா

கிரிக்கெட்டின் திருவிழாவாக பார்க்கப்படும்​ IPL தொடர் இன்று ஆரம்பம்

by Staff Writer 28-03-2026 | 1:57 PM

Colombo (News1st - கிரிக்கெட்டின் திருவிழாவாக பார்க்கப்படும்​ IPL தொடர் இன்றிரவு(28) ஆரம்பமாகின்றது.

19 ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

தொடரின் முதல் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (28) இரவு 07.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. 

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.  

இம்முறை IPL ஆரம்ப நிகழ்வு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு தொடரில் சாம்பியானான அணி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியனான நிலையில் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததால் இம்முறை ஆரம்ப நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது. இம்முறை 

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷானும் தலைவர்களாக செயற்படுகின்றனர்.