.webp)

COLOMBO (News 1st) நாட்டின் சில பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுகின்றது. அதேபோன்று எல் - நினோ நிலைமை மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் நியூஸ் ஃபெஸ்ட்டுடனான கலந்துரையாடலில் கூறினார். எல் - நினோ நிலைமை என்பது புபிக் பெருங்கடலின் மேற்பரப்பின் வெப்பநிலை சாதாரண வெப்பநிலை மட்டத்தை விட உயரும் நிலையாகும். பொதுவாக இது மத்திய பசுபிக் பெருங்கடல் மற்றும் கிழக்கு பசுபிக் பெருங்கடலை அதிகமாக பாதிப்பதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.
எல் - நினோ காலப்பகுதிகளில் இலங்கையின் இரண்டாவது மத்திய பருவப் பெயர்ச்சி காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரிப்பை காணமுடிகிறது. அதற்கமைய, எல் - நினோ நிலைமையின் தாக்கத்தால் வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், விவசாயத்துறை , மின்சாரம் போன்ற துறைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக கலந்துரையாடி வருவதாக மெரில் மென்டிஸ் கூறினார்.
