எரிபொருள் விலையை அதிகரித்தது சினோபெக்

எரிபொருள் விலையை அதிகரித்தது சினோபெக்

by Staff Writer 22-03-2026 | 3:56 PM

Colombo (News 1st) இன்று(22) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 122 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 487 ரூபா)

சுப்பர் டீசல் விலை 219 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 573 ரூபா)

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் டீசல் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு அமைய விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.