விவேகானந்தா கல்லூரிக்கு புதிய நூலகம்

விவேகானந்தா கல்லூரிக்கு நவீனமயப்படுத்தப்பட்ட நூலகம்

by Chandrasekaram Chandravadani 16-03-2026 | 6:54 PM

Colombo (News 1st)  கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1989 சாதாரண தரம் மற்றும் 1992 உயர்தர மாணவர்களால் முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்ட நூலகம் மாணவர் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

பாடசாலைக்கு 100 பகவத்கீதை நூல்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கல்லூரியின் அதிபர் திரு. மூ.மூவேந்தன்  பிரதம அதிதியாகவும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் ஓய்வுபெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளரும் தற்போதைய வரி ஆலோசகருமான திரு.பாலசுந்தரம் சிவாஜி சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.