.webp)

Colombo (News 1st) காலி தேசிய வைத்தியசாலையில் 02 நடமாடும் குளிரூட்டி கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய கடற்படையினர் 84 பேரின் சடலங்களையும் ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட இன்று(11) உத்தரவிட்டார்.
காலி துறைமுகம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அமெரிக்காவின் Torpedo தாக்குதலுக்குள்ளான ஈரானின் IRIS Dena கப்பல் அண்மையில் நாட்டின் தெற்கு கடற்பரப்பை வந்தடைந்தது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த ஈரானியர்கள் 84 பேரின் சடலங்களும் காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 32 கடற்படையினர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
