.webp)
-554304.jpg)
COLOMBO (News 1st)
அனைத்து அஸ்வெசும பயனாளர்களினதும் தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
பிரதேச செயலக அதிகாரிகளால் அஸ்வெசும பயனாளர்களின் வீடுகளில் மீண்டும் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்துள்ளார்.
நியூஸ் ஃபெஸ்ட் தொடர்புகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளர்களின் தகவல்களை சமர்ப்பிக்குமாறு கோரிய போதும், இதுவரை சமர்பிக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 20ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தும் பெரும்பாலானோர் தகவல்களை சமர்ப்பிக்க தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தகவல்களை சமர்ப்பிக்க கோரியமை தொடர்பான விடயம் முறையாக பயனாளர்களை சென்றடையாமை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் பயனாளர்களுக்கும் இடையிலான தொடர்பாடல் இடைவௌி உள்ளிட்ட சில பிரச்சினைகள் காரணமாக கூட தகவல்கள் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பிரதேச செயலக அலுவலக அதிகாரிகளால் அஸ்வெசும பயனாளர்களின் வீடுகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பயனாளர்கள் கட்டமைப்பிலிருந்து நீக்கப்படக்கூடிய நிலை காணப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர மேலும் கூறியுள்ளார்.
