மஹபொல நிதியத்திலிருந்து விசேட புலமைப்பரிசில்

மஹபொல நிதியத்திலிருந்து விசேட புலமைப்பரிசில்

by Staff Writer 27-02-2026 | 6:25 PM

COLOMBO (News 1st) டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தில் இருந்து ஒருதடவை மாத்திரம் செலுத்தப்படும் விசேட புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணத்தை வழங்கும் நோக்கில் செயற்படுத்தப்படவுள்ளது. 

இந்த விசேட புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்காக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

www.mahapola.lk எனும் மஹபொல இணையத்தளத்திற்குப் பிரவேசித்து அதற்காக விண்ணப்பிக்க முடியும்.